வியர்வை பெரும்பாலானோருக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. கோடை காலத்தில் குளித்தாலும் வியர்வை சுரப்பு அதிகம் இருப்பதால் ஒரு வித துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இந்த நாற்றம் உடலில் சுரக்கும் ஒரு வித சுரப்பிகளில் இருந்து வெளிப்படுகிறது.
உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் இணைந்து கடுமையான நாற்றத்தை உண்டாக்குகிறது. காற்று உட்புகாத ஈரப்பதமான உறுப்புகள் வியர்வையால் மேலும் துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. அதிகப்படியாக வியர்த்தல் மிகவும் சங்கடமாக மாறும், ஆனால் அது தவிர்க்க முடியாதது.
தோலில் உள்ள இரு வகைச் சுரப்பிகளால் வியர்வை உருவாகிறது.
உடற்பயிற்சி செய்யும்போது உடலெங்கும் சுரக்கும் வியர்வை எக்ரின் என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. துர்நாற்றம் அற்ற இந்த வியர்வை உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
முடி நிறைந்த தோள் பகுதி அக்கிளிலும், பிறப்பு உறுப்பு பகுதிகளிலும் சுரக்கும் வியர்வை அபோக்ரின் என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. இவ்வியர்வையில் புரதம் உள்ளிட்ட சிக்கல் நிறைந்த பல மூலக்கூறுகள் உள்ளன. இவை மணமற்று இருந்தாலும் பாக்டீரியாக்கள் இவற்றை துர்நாற்றம் கொண்டதாக மாற்றுகின்றன.
வெந்தயம்
நம் உடலில் உள்ள நச்சு பொருட்களை வெளியேற்றுவதில் வெந்தயத்தின் பங்கு முக்கியமானது. இதன் இலைகளை மற்றும் விதைகள் இரண்டுமே உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது.
ஒரு டம்ளர் நீரில் சிறிது வெந்தயத்தை போட்டு கொதிக்க வைத்து அதனை குடித்தால் நாள் முழுவதும் உடலில் துர்நாற்றம் ஏற்படாது.
அருகம்புல்
எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டது அருகம்புல். அருகம்புல்லில் குளோரோபில் அதிகளவு உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கும்.
ஒரு டம்ளர் பாலில் இரண்டு ஸ்பூன் அருகம்புல் சாறு சேர்த்து காலையில் குடித்தால் மாலை வரை புத்துணர்ச்சியாகவும், துர்நாற்றம் இல்லாமலும் இருக்கலாம்.
தயிர் மற்றும் மஞ்சள் தூள்
மஞ்சள் தூள் ஒரு சிறந்த கிருமி நாசினி, இதனுடன் தயிர் கலந்து பயன்படுத்தும் போது வியர்வை சுரப்பியில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வாடையைக் குறைக்கும்.
தினமும் குளிப்பதற்கு முன்பு கெட்டித்தயிருடன், மஞ்சள் தூள், ஜவ்வாது கலந்து நன்றாக குழைத்து அக்குளில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இப்படி செய்து வந்தால் துர்நாற்றம் மறையும்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை வாய் துர்நாற்றத்தை போக்க கூடியது என்பது நாம் அறிந்ததே. ஆனால் இது ஒரு இயற்கை வாசனை திரவியமாக செயல்படக்கூடியது என்பது நாம் அறியாத ஒன்று.
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் துர்நாற்றம் காணாமல் போகும். சில துண்டு இலவங்கப்பட்டையை வாயில் போட்டு தினமும் இரண்டு முறை மென்றாலே போதும் பர்ப்யூம் தேவையில்லை.
ரோஸ்மேரி டீ
ரோஸ்மேரி டீ உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கிறது, மேலும் இதில் மென்தால் மற்றும் குளோரோபில் அதிகளவில் உள்ளது.
இவை இரண்டுமே துர்நாற்றத்தை விரட்டும் தன்மையுடையவை.
ஏலக்காய்
ஏலக்காய் உணவில் வாசனையை சேர்க்கும் என்று மட்டும்தான் நாம் அறிவோம், ஆனால் இது உடலில் உராப்தியாகும் மோசமான துர்நாற்றத்தை விரட்டும் என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இதன் இனிமையான நறுமணம் வாய் மற்றும் உடல்துர்நாற்றத்தை சரிசெய்யக்கூடியது.
எலுமிச்சை
உடலின் பல ஆரோக்கிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருள் எலுமிச்சை ஆகும். தலைவலியில் இருந்து உடல் எடை குறைப்பு வரை அனைத்திற்கும் எலுமிச்சை உபயோகப்படுகிறது.
இயற்கையிலேயே அமிலத்தன்மை இருப்பதால் இது உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்து உடலில் நல்ல வாசனையை ஏற்படுத்துகிறது.
ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு குடிப்பது அதிகளவு ஆன்டிஆக்சிடண்ட்களை வழங்குகிறது. இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது.
க்ரீன் டீ
உடல் துர்நாற்றத்தை போக்கும் ஒரு சிறந்த நண்பன் க்ரீன் டீ ஆகும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் உடலில் நச்சுக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை குறைக்கிறது.
தினமும் இரண்டு கப் க்ரீன் டீ குடிப்பது உடலை இயற்கையாகாவே வாசனையாக வைத்திருக்கும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு எளிதில் செரிக்கக்கூடிய ஒரு பொருள் அதேசமயம் இயற்கை அமிலத்தன்மை கொண்டது. எனவே உடலில் உள்ள துர்நாற்றத்தை எளிதில் போகக்கூடும்.
இதை பழமாகவும் சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் குடிக்கலாம், எப்படி பயன்படுத்தினாலும் இது உடலில் இயற்கையாக வாசனையை அதிகரிக்கக்கூடியது.
தேங்காய் எண்ணெய்
செரிமான கோளாறு உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது தெரியுமா? செரிமானம் உடலில் மறைமுகமாக நாற்றத்தை ஏற்ப்படுத்தக்கூடும். எனவே தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வேப்பிலை
வேப்பிலை வியர்வை துர்நாற்றத்தை நீக்குவது மட்டுமின்றி, கிருமிகளை அழிக்கவும் பயன்படுத்துகிறது. வேப்பிலையுடன், மஞ்சள் தூள் கலந்தும் பயன்படுத்தலாம்.
தளர்வான, பொருத்தமான வசதியான ஆடைகள் வியர்வையை தடுக்க உதவுகின்றன. இறுக்கமான ஆடைகளை அணிவது அக்குள் பகுதிகளில் அதிக வியர்வை சுரப்பை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, தளர்வான துணிகளை அணிய முயற்சிக்கவும். மேலும் அவை துணிகளில் வியர்வை மற்றும் கறை படிவதைத் தடுக்க உதவும்.