நமது உடலுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானது தண்ணீர். உணவில்லாமல் கூட இருந்துவிடலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் இருப்பது மிகக் கடினம்.
தண்ணீர் மற்றும் பிற திரவங்கள் உணவுப் பொருட்களை சிறு துகள்களாக உடைக்க உதவுகின்றன. தண்ணீர் ஆனது மலத்தை மென்மையாக்கி, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
உணவு சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதோ, சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் நாள்தோறும் இருந்த வண்ணம் உள்ளது.
சாப்பிடுவதற்கு முன் தண்ணீர்
சாப்பாட்டுக்கு முன் கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்காகத்தான் சாப்பிடுவதற்கு முன்பு குறிப்பிட்ட அளவு தண்ணீரை பருகுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் உடல் பலவீனம் அடைவதற்கும், மயக்க மடைவதற்கும் வாய்ப்பு இருப்பதாக ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.
குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால், அவர்கள் வழக்கமாக சாப்பிடும் அளவை விட குறைவாக சாப்பிட வாய்ப்புள்ளது.
இதையும் படிக்கலாம் : வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
சாப்பாடு இடையே தண்ணீர்
உணவருந்தும் போது தாகம் அல்லது விக்கல் எடுத்தாலோ குறைந்த அளவிலான தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் உணவை உட்கொள்ளும்போது தண்ணீரை குடிப்பதால் செரிமான மண்டலத்தில் என்சைம் செயல்திறன் குறைத்து, உடலில் வேண்டாத நச்சுக்கள் அதிகமாக உருவாகும் அபாயம் இருக்கிறது.
சாப்பிடும் போது தண்ணீரை சிறிது சிறிதாகக் குடித்தால் செரிமான மண்டலத்துக்கு நல்லது மேலும் உணவுகளை உடைப்பதற்கு நீர் உதவியாக இருக்கும் என ஆயுர்வேதம் கூறுகிறது.
சாப்பிட்ட பின் தண்ணீர்
உணவு உட்கொண்ட உடனேயே தண்ணீர் உட்கொள்வதால், சீரான செரிமானம் தடைப்பட்டு உடல்பருமன் அதிகரிக்கும் என ஆயுர்வேதம் கூறுகிறது.
உணவருந்திய பிறகு 30 நிமிட இடைவேளைக்கு பின் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு சாப்பிட்ட 1 – 2 மணி நேரத்திற்கு பிறகு தாகத்திற்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் குடிக்கலாம்.
சாப்பிடும் போது சோடா பானம், காபி போன்றவற்றை பருக வேண்டாம். இவை உடல்நலத்திற்கு நல்லதல்ல.
சிறந்த செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு எப்போதும் வெதுவெதுப்பான நீரை உணவுடன் குடிக்கலாம்.
மேலும் படிக்க : குதிகால் வெடிப்பை போக்க சில இயற்கை வழிகள்