இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியமானது. வீட்டைக் கட்டுவது முதல் அதை அலங்கரிப்பது வரை அனைத்திற்கும் வாஸ்து முக்கியமானது. அதேபோல், உங்கள் வீட்டில் காலணிகள் வைக்கப்படும் இடம் முதல் உங்கள் ஆடைகளை எப்படிப் பராமரிக்கிறீர்கள் என்பது வரை அனைத்திலும் வாஸ்து முக்கியமானது.
செருப்பு, ஷூ போன்றவற்றை தலைகீழாக வைக்க கூடாது என்று பெரியவர்கள் சொல்வதை அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஏனெனில் அது துரதிர்ஷ்டவசமாக கருதப்படுகிறது. அவ்வாறு செய்தால் குடும்ப தகராறு ஏற்படும் என நம்பப்படுகிறது.
காலணி மற்றும் செருப்புகளை வீட்டில் வைப்பதற்கு வாஸ்து சாஸ்திரம் சில விதிகளை கூறுகிறது. வீட்டில் காலணி மற்றும் செருப்புகளை வைக்கும்போதும், கழற்றும்போதும் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.
வடகிழக்கு திசையில் காலணிகள் மற்றும் செருப்புகளை வைக்க வேண்டாம்
நம்மில் பலர் காலணிகளை நமது விருப்பத்திற்கு ஏற்ப கழட்டிவிடுவோம். ஆனால், இது நல்லதல்ல தெரியுமா? வழக்கப்படி, வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் காலணிகள் மற்றும் செருப்புகளை வைக்கக்கூடாது. ஏனெனில் அது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.
வடக்கு அல்லது கிழக்கில் ஷூ மற்றும் செருப்பைக் கழற்றினால் அன்னை லக்ஷ்மி கோபப்படுவாள் என்பது ஐதீகம். இதனால் குடும்பத்தின் பொருளாதார நிலை நலிவடையும். அது மட்டுமின்றி, வீட்டில் வறுமையை அதிகப்படுத்துகிறது. குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை மோசமடையலாம்.
ஷூ மற்றும் செருப்புகளை வைக்க சரியான திசை என்ன?
வாஸ்து சாஸ்திரத்தின்படி, காலணிகள் மற்றும் செருப்புகளின் அலமாரி எப்போதும் வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசையில் அமைந்திருக்க வேண்டும். வெளியில் இருந்து வீட்டிற்குள் நுழையும் போது, தெற்கு அல்லது மேற்கு திசையில் மட்டுமே காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றவும். வீட்டின் பிரதான வாசலில் காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றக்கூடாது.
காலணிகளை தலைகீழாக வைக்க வேண்டாம்
வழக்கப்படி, வீட்டில் ஷூ மற்றும் செருப்புகளை ஒருபோதும் தலைகீழாக வைக்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சியையும் அமைதியையும் அழித்துவிடும். இதனாலேயே ஷூ, செருப்பை தலைகீழாக வைக்கக்கூடாது. இதனால், வீட்டில் வறுமை உண்டாகும்.
இதையும் படிக்கலாம் : முருங்கை மரத்தை ஏன் வீட்டிற்கு முன்பு வைக்கக்கூடாது?