இதத்துப் பற்றி (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 323 

இதத்துப்பற் றிதழ்த்துப்பற் றிருட்பொக்கக் கருத்திட்டத்
தியக்கத்திற் றியக்குற்றுச் – சுழலாதே

எலுப்புச்சுக் கிலக்கத்தத் தடித்தொக்குக் கடத்தைப்பெற்
றெடுத்துப்பற் றடுத்தற்பத் – துழலாதே

சுதத்தத்தச் சதத்தத்தப் பதத்தர்க்குற் றவற்றைச்சொற்
றுவக்கிற்பட் டவத்தைப்பட் – டயராதே

துணைச்செப்பத் தலர்கொத்துற் பலச்செச்சைத் தொடைப்பத்திக்
கடப்பப்பொற் கழற்செப்பித் – தொழுவேனோ

கொதித்துக்குத் திரக்கொக்கைச் சதித்துப்பற் றிகைக்குட்பொற்
குலத்தைக்குத் திரத்தைக்குத் – தியவேலா

குறத்தத்தைக் கறத்தத்திக் குமுத்தத்தத் தமொக்கிக்குக்
குலத்துக்குக் குடக்கொற்றக் – கொடியோனே

கதச்சுத்தச் சுதைச்சித்ரக் களிற்றுக்கொற் றவற்குக்கற்
பகச்சொர்க்கப் புரப்பொற்பைப் – புரிவோனே

கடுக்கைக்கட் செவிக்கற்றைச் சடைப்பக்கக் கொடிக்கற்புக்
கடற்கச்சிப் பதிச்சொக்கப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : எனக்குச்சற்று (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 324 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *