இலகுகனி மிஞ்சு (பழனி) – திருப்புகழ் 120

இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு
மிருவிழியெ னஞ்சு – முகமீதே

இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு
மிலகியக ரும்பு – மயலாலே

நிலவிலுடல் வெந்து கரியஅல மந்து
நெகிழுமுயிர் நொந்து – மதவேளால்

நிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்த
நினைவொடுமி றந்து – படலாமோ

புலவினைய ளைந்து படுமணிக லந்து
புதுமலர ணிந்த – கதிர்வேலா

புழுகெழம ணந்த குறமகள்கு ரும்பை
பொரமுகையு டைந்த – தொடைமார்பா

பலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்த
பருமயில டைந்த – குகவீரா

பணைபணிசி றந்த தரளமணி சிந்து
பழநிமலை வந்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : உயிர்க் கூடு (பழனி) – திருப்புகழ் 121 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *