இந்திராணி – சப்த கன்னியர்

இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.

சொத்து சுகம் தருபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!. திருமணம் ஆகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப் பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.

விரைவில் திருமணம் நிச்சயமாக இந்த ஸ்லோகம்..!

தியான சுலோகம்

அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை
இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:

மந்திரம்

ஓம் ஈம் இந்திராண்யை நம:
ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:

இதையும் படிக்கலாம் : சாமுண்டி – சப்த கன்னியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *