இறைச்சிப் பற்று (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 325 

இறைச்சிப்பற் றிரத்தத்திட் டிசைக்கொக்கப் பரப்பப்பட்
டெலுப்புக்கட் டளைச்சுற்றிச் – சுவர்கோலி

எடுத்துச்செப் பெனக்கட்டிப் புதுக்குப்புத் தகத்திற்புக்
கெனக்குச்சற் றுனக்குச்சற் – றெனுமாசைச்

சிறைக்கொத்திப் பிறப்பிற்பட் டுறக்கச்சொப் பனத்துற்றுத்
திகைக்கப்பட் டவத்தைப்பட் – டுழலாதுன்

திருப்பத்மத் திறத்தைப்பற் றுகைக்குச்சித் திரத்தைச்சொற்
றிதக்கொற்றப் புகழ்ச்செப்பித் – திரிவேனோ

பிறைச்செக்கர்ப் புரைக்கொத்துச் சடைப்பச்சைக் கொடிக்கிச்சைப்
பிறக்குற்றத் திருப்பக்கச் – சிவநாதர்

பெருக்கப்புத் தடக்கைக்கற் பகத்தொப்பைக் கணத்துக்குப்
பிரசித்தக் கொடிக்குக்டக் – கொடியோனே

பறைக்கொட்டிக் களைச்சுற்றக் குறட்செக்கட் கணத்திற்குப்
பலிக்குப்பச் சுடற்குத்திப் – பகிர்வேலா

பணப்பத்திக் கணத்துத்திப் படுக்கைக்கச் சபத்திச்சைப்
படுக்கச்சிப் பதிச்சொக்கப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கடத்தைப் பற்று (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 326

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *