
இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்
இராமசர மாகும் – விழியாலும்
இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும்
இராதஇடை யாலும் – இளைஞோர்நெஞ்
சராவியிரு போதும் பராவிவிழ வேவந்
தடாதவிலை கூறும் – மடவாரன்
படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும்
அநாதிமொழி ஞானந் – தருவாயே
குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங்
குலாவியினி தோதன் – பினர்வாழ்வே
குணாலமிடு சூரன் பணாமுடிக டோறுங்
குடாவியிட வேலங் – கெறிவோனே
துராலுமிகு தீமுன் பிராதவகை போலுந்
தொடாமல்வினை யோடும் – படிநூறுஞ்
சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
சுவாமிமலை வாழும் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : இருவினை புனைந்து (சுவாமிமலை) – திருப்புகழ் 205