இருகுழை யெறிந்த (திருச்செந்தூர்) – திருப்புகழ் 32

இருகுழை யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திட
இணைசிலை நெரிந்தெ ழுந்திட – அணைமீதே

இருளள கபந்தி வஞ்சியி லிருகலை யுடன்கு லைந்திட
இதழமு தருந்த சிங்கியின் – மனமாய

முருகொடு கலந்த சந்தனஅளருப டுகுங்கு மங்கமழ்
முலைமுக டுகொண்டெ ழுந்தொறு – முருகார

முழுமதி புரிந்த சிந்துர அரிவைய ருடன்க லந்திடு
முகடியு நலம்பி றந்திட – அருள்வாயே

எரிவிட நிமிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையு
மிதழியொ டணிந்த சங்கரர் – களிகூரும்

இமவரை தருங்க ருங்குயில் மரகத நிறந்த ருங்கிளி
யெனதுயி ரெனுந்த்ரி யம்பகி – பெருவாழ்வே

அரைவட மலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைக
ளணிமணி சதங்கை கொஞ்சிட – மயில்மேலே

அகமகிழ் வுகொண்டு சந்ததம் வருகும ரமுன்றி லின்புறம்
அலைபொரு தசெந்தில் தங்கிய – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : இருள்விரி குழலை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 33

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *