இருவினை புனைந்து (சுவாமிமலை) – திருப்புகழ் 205

இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி
னிருவினை யிடைந்து போக – மலமூட

விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத
மிலையென இரண்டு பேரு – மழகான

பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்
பணியவிண் மடந்தை பாத – மலர்தூவப்

பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட
பருமயி லுடன்கு லாவி – வரவேணும்

அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம்
அடியென விளங்கி யாடு – நடராஜன்

அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்
அயலணி சிவன்பு ராரி – யருள்சேயே

மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி
மறலியுண வென்ற வேலை – யுடையோனே

வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி
மலைமிசை விளங்கு தேவர் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : எந்தத் திகையினும் (சுவாமிமலை) – திருப்புகழ் 206

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *