கச்சணி இளமுலை (திருத்தணிகை) – திருப்புகழ் 253

கச்சணி யிளமுலை முத்தணி பலவகை
கைச்சரி சொலிவர – மயல்கூறிக்

கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர்
கட்செவி நிகரல்குல் – மடமாதர்

இச்சையி னுருகிய கச்சைய னறிவிலி
யெச்சமி லொருபொரு – ளறியேனுக்

கிப்புவி மிசைகமழ் பொற்பத மலரிணை
யிப்பொழு தணுகவு – னருள்தாராய்

கொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனை
நச்சியெ திருடிய – குறையால்வீழ்

குற்கிர வினியொடு நற்றிற வகையறி
கொற்றவு வணமிசை – வருகேசன்

அச்சுதை நிறைகடல் நச்சர வணைதுயில்
அச்சுதன் மகிழ்தரு – மருகோனே

அப்பணி சடையரன் மெச்சிய தணிமலை
யப்பனெ யழகிய – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கடற்செகத் தடக்கி (திருத்தணிகை) – திருப்புகழ் 254

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *