கடலை பொரியவரை பலக னிகழைநுகர்
கடின குடவுதர – விபரீத
கரட தடமுமத நளின சிறுநயன
கரிணி முகவரது – துணைவோனே
வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்
வலம்வ ருமரகத – மயில்வீரா
மகப திதருசுதை குறமி னொடிருவரு
மருவு சரசவித – மணவாளா
அடல சுரர்கள்குல முழுது மடியவுய
ரமரர் சிறையைவிட – எழில்மீறும்
அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு
மரக ரசரவண – பவலோலா
படல வுடுபதியை யிதழி யணிசடில
பசுப திவரநதி – அழகான
பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை
பழநி மலையில்வரு – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : கதியை விலக்கு (பழனி) – திருப்புகழ் 128