கடற்செகத் தடக்கி (திருத்தணிகை) – திருப்புகழ் 254

கடற்செகத் தடக்கிமற் றடுத்தவர்க் கிடுக்கணைக்
கடைக்கணிற் கொடுத்தழைத் – தியல்காமக்

கலைக்கதற் றுரைத்துபுட் குரற்கள்விட் டுளத்தினைக்
கரைத்துடுத் தபட்டவிழ்த் – தணைமீதே

சடக்கெனப் புகத்தனத் தணைத்திதழ்க் கொடுத்துமுத்
தமிட்டிருட் குழற்பிணித் – துகிரேகை

சளப்படப் புதைத்தடித் திலைக்குணக் கடித்தடத்
தலத்தில்வைப் பவர்க்கிதப் – படுவேனோ

இடக்கடக் குமெய்ப்பொருட் டிருப்புகழ்க் குயிர்ப்பளித்
தெழிற்றினைக் கிரிப்புறத் – துறைவேலா

இகற்செருக் கரக்கரைத் தகர்த்தொலித் துரத்தபச்
சிறைச்சியைப் பசித்திரைக் – கிசைகூவும்

பெடைத்திரட் களித்தகுக் குடக்கொடிக் கரத்தபொய்ப்
பிதற்றறப் படுத்துசற் – குருவாய்முன்

பிறப்பிலிக் குணர்த்துசித் தவுற்றநெற் பெருக்குவைப்
பெருக்குமெய்த் திருத்தணிப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கரிக்குழல் விரித்தும் (திருத்தணிகை) – திருப்புகழ் 255 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *