கதிரவனெ ழுந்து (சுவாமிமலை) – திருப்புகழ் 210

கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது
கடலளவு கண்டு மாய – மருளாலே

கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்
கவினறந டந்து தேயும் – வகையேபோய்

இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு
மிடமிடமி தென்று சோர்வு – படையாதே

இசையொடுபு கழந்த போது நழுவியப்ர சண்டர் வாச
லிரவுபகல் சென்று வாடி – யுழல்வேனோ

மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக
மலர்வளநி றைந்த பாளை – மலரூடே

வகைவகையெ ழுந்த சாம வதிமறைவி யந்து பாட
மதிநிழலி டுஞ்சு வாமி – மலைவாழ்வே

அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப
அணிமயில்வி ரும்பி யேறு – மிளையோனே

அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்ட பாவை
அருள்புதல்வ அண்ட ராஜர் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கறை படும் உடம்பு (சுவாமிமலை) – திருப்புகழ் 211

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *