களப முலையை (பழனி) – திருப்புகழ் 139 

களபமுலை யைத்தி றந்து தளவநகை யைக்கொ ணர்ந்து
கயலொடுப கைத்த கண்கள் – குழைதாவக்

கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழ்ந்து
கடியிருளு டுக்கு லங்க – ளெனவீழ

முழுமதியெ னச்சி றந்த நகைமுகமி னுக்கி யின்ப
முருகிதழ்சி வப்ப நின்று – விலைகூறி

முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்து
முடுகுமவ ருக்கி ரங்கி – மெலிவேனோ

இளமதிக டுக்கை தும்பை அரவணிப வர்க்கி சைந்து
இனியபொரு ளைப்ப கர்ந்த – குருநாதா

இபமுகவ னுக்கு கந்த இளையவம ருக்க டம்ப
எனதுதலை யிற்ப தங்க – ளருள்வோனே

குழகெனஎ டுத்து கந்த உமைமுலைபி டித்த ருந்து
குமரசிவ வெற்ப மர்ந்த – குகவேலா

குடிலொடுமி கச்செ றிந்த இதணுளபு னத்தி ருந்த
குறவர்மக ளைப்பு ணர்ந்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கறுத்த குழலணி (பழனி) – திருப்புகழ் 140 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *