காமியத் தழுந்தி (சுவாமிமலை) – திருப்புகழ் 212

காமியத் தழுந்தி – யிளையாதே
காலர்கைப் படிந்து – மடியாதே

ஓமெழுத் திலன்பு – மிகவூறி
ஓவியத் திலந்த – மருள்வாயே

தூமமெய்க் கணிந்த – சுகலீலா
சூரனைக் கடிந்த – கதிர்வேலா

ஏமவெற் புயர்ந்த – மயில்வீரா
ஏரகத் தமர்ந்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : குமரகுருபர முருக குகனே (சுவாமிமலை) – திருப்புகழ் 213

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *