கண்டுமொழி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 39

கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு
கண்கள்குழல் கொண்டல் என்று – பலகாலும்

கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
கங்குல்பகல் என்று நின்று – விதியாலே

பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
பங்கயப தங்கள் தந்து – புகழோதும்

பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்து
பண்புபெற அஞ்ச லஞ்ச – லெனவாராய்

வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
வம்பினைய டைந்து சந்தின் – மிகமூழ்கி

வஞ்சியைமு னிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
வந்தழகு டன்க லந்த – மணிமார்பா

திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
செஞ்சமர்பு னைந்து துங்க – மயில்மீதே

சென்றசுரர் அஞ்ச வென்று குன்றிடைம ணம்பு ணர்ந்து
செந்தில்நகர் வந்த மர்ந்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கமல மாதுடன் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 40

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *