கரியிணைக் கோடெனத் தனமசைத் தாடிநற்
கயல்விழிப் பார்வையிற் – பொருள்பேசிக்
கலையிழுத் தேகுலுக் கெனநகைத் தேமயற்
கலதியிட் டேயழைத் – தணையூடே
செருமிவித் தாரசிற் றிடைதுடித் தாடமற்
றிறமளித் தேபொருட் – பறிமாதர்
செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்
சிவபதத் தேபதித் – தருள்வாயே
திரிபுரக் கோலவெற் பழல்கொளச் சீர்நகைச்
சிறிதருட் டேவருட் – புதல்வோனே
திரைகடற் கோவெனக் குவடுகட் டூள்படத்
திருடர்கெட் டோடவிட் – டிடும்வேலா
பரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற்
படியினிட் டேகுரக் – கினமாடும்
பழநியிற் சீருறப் புகழ்குறப் பாவையைப்
பரிவுறச் சேர்மணப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : கருகி அகன்று (பழனி) – திருப்புகழ் 132