கறுக்கப் பற்று (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 328 

கறுக்கப்பற் றுவர்ப்பிட்டுச் சிரித்துச்சற் றுறுக்கிக்கட்
பிறக்கிட்டுப் படக்கற்பித் – திளைஞோர்தங்

கழுத்தைச்சிக் கெனக்கட்டித் தனச்செப்புப் படக்குத்திட்
டுருக்கிக்கற் பழிக்கப்பொற் – பெழுகாதல்

புறப்பட்டுக் களிக்கக்கற் புரத்தைப்பிட் டரக்கிப்பொற்
பணிக்கட்டிற் புறத்துற்றுப் – புணர்மாதர்

பொருத்தத்தைத் தவிர்த்துச்சற் றிரக்ஷித்துப் புரப்பப்பொற்
பதத்தைப்பெற் றிருக்கைக்குப் – பெருவேனோ

திறற்கொக்கைப் படக்குத்திச் செருக்கிக்கொக் கரித்துச்சக்
கரிக்குப்புத் திரற்குற்றுத் – தளைபூணச்

சினத்துப்பொற் பொருப்பைப்பொட் டெழுத்தித்திக் கரித்துப்புத்
திரத்தத்திற் சிரித்துற்றுப் – பலபேய்கள்

பறிக்கப்பச் சிறைச்சிக்கட் கறிக்குப்பைச் சிரச்சிக்குப்
பரப்பொய்க்கட் டறப்புக்குப் – பொருதோனே

பணிச்செச்சைத் தொடைச்சித்ரப் புயத்துக்ரப் படைச்சத்திப்
படைக்கச்சிப் பதிச்சொக்கப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : அற்றைக்கு இரைதேடி (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 329 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *