கரூர் சட்டமன்றத் தொகுதி

கரூர் சட்டமன்றத் தொகுதி கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 135வது தொகுதியாக கரூர் தொகுதி உள்ளது. 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 83.63 சதவீத வாக்குகளை பதிவு செய்த இத்தொகுதி தமிழகத்தில் அதிக மக்கள் வாக்களித்த தொகுதிகளில் ஒன்றாகும்.

சென்னை மாநிலம்

ஆண்டு

கட்சி வெற்றி பெற்ற வேட்பாளர்

வாக்குகள்

1952 இந்திய தேசிய காங்கிரசு மற்றும் சுயேச்சை டி. வி. சன்னாசி மற்றும் எம். மாணிக்கசுந்தரம் 29,429 மற்றும் 21,113
1957 இந்திய தேசிய காங்கிரசு டி. எம். நல்லசாமி 31,611
1962 இந்திய தேசிய காங்கிரசு டி. எம். நல்லசாமி 35,969
1967 இந்திய தேசிய காங்கிரசு டி. எம். நல்லசாமி 33,552

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 சீ. நல்லசாமி திமுக 45,977
1977 கே. வடிவேல் அதிமுக 33,856
1980 எம். சின்னசாமி அதிமுக 54,331
1984 கே. வடிவேல் அதிமுக 65,363
1989 கே. வி. ராமசாமி திமுக 54163
1991 எம். சின்னசாமி அதிமுக 89,351
1996 வாசுகி முருகேசன் திமுக 79,302
2001 டி. என். சிவசுப்பிரமணியன் இந்திய தேசிய காங்கிரசு 82,012
2006 வே. செந்தில்பாலாஜி அதிமுக 80,214
2011 வே. செந்தில்பாலாஜி அதிமுக 99,738
2016 எம். ஆர். விஜயபாஸ்கர் அதிமுக 81,936
2021 வே. செந்தில்பாலாஜி திமுக 79,039

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,14,207 1,26,847 25 2,41,079

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

கரூர் தாலுக்கா (பகுதி)

நஞ்சை கடம்பங்குறிச்சி, புஞ்சை கடம்பங்குறிச்சி, நன்னியூர், குப்பிச்சிபாளையம், வாங்கல், நெரூர் வடக்கு, நெரூர் தெற்கு, அச்சமாபுரம், சோழூர், பஞ்சமாதேவி, மின்னாம்பிள்ளி, மண்மங்கலம், ஆத்தூர், ஆண்டாங்கோவில் (மேற்கு), காடப்பாறை, திருமாநிலையூர் மற்றும் ஆண்டாங்கோயில் (கிழக்கு) கிராமங்கள், இனாம் கரூர் (நகராட்சி), கரூர் (நகராட்சி) மற்றும் தாந்தோணி (நகராட்சி).

கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *