கறிவேப்பிலையின் நன்மைகள்

kari leaf benefits

கறிவேப்பிலையை நாம் தினமும் சமைக்கும் உணவுகளில் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் ஒரு பொருள் என்று பலரும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் கறிவேப்பிலையில் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஏராளமான சத்துகள் நிறைந்த கறிவேப்பிலை பல நோய்களை தீர்க்க கூடியவை.

சத்துக்கள்

  • இரும்பு சத்துகள்
  • வைட்டமின் பி
  • வைட்டமின் ஏ
  • வைட்டமின் பி 2
  • கால்சியம்
  • பாஸ்பரஸ்
  • நார்சத்துகள்

நீரிழவு நோய் ( சர்க்கரை நோய் )

கறிவேப்பிலை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் காலையில் ஒரு பத்து கறிவேப்பிலையை தொடந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

செரிமானம்

அஜீரணம் மற்றும் வாயு தொல்லையில் இருந்து விடுபட ஒரு ஸ்பூன் காய வைத்து அரைத்த கறிவேப்பிலை பொடி, அரை ஸ்பூன் சீரக தூள் ,உலர்ந்த இஞ்சு ஒரு சிறு துண்டு மற்றும் சிறிது கருப்பு உப்பு சேர்த்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

பார்வை திறன் அதிகரிக்க

கறிவேப்பிலையில் கண்பார்வை திறனை அதிகரிக்க செய்ய கூடிய விட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ யில் உள்ள காரோடிநய்ட்ஸ் கருவிழியை பாதுகாக்கிறது.

வைட்டமின் சி உடலில் குறையும் பொது பார்வை திறன் மங்குதல், மாலை கண் போன்ற கண் பிரச்சனைகள் ஏற்படலாம். தினமும் உணவில் கறிவேப்பில்லையை சேர்த்து கொள்வது கண்பார்வை பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவும் .

இரத்த சோகை

கறிவேப்பிலை போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்துக்களால் நிறைந்தது. போலிக் அமிலம் உடலில் உள்ள உயிர் அணுக்களுக்கு ரத்தம் கொண்டு செல்வதற்கும் இரும்பு சத்தை உடல் உறிஞ்சிவதற்க்கும் உதவுகிறது. ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்கிறது.

இரத்த சோகை உள்ளவர்கள் கறிவேப்பிலையை பொடி செய்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரும்பு சத்து அதிகரிக்கும் இரத்த சோகையும் நீங்கும்.

கொழுப்பை நீக்கும்

கறிவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள கார்பசோல் ஆல்கலாய்டுகள் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொழுப்பு என்று சொல்லப்படும் HDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

மலச்சிக்கல்

கறிவேப்பிலை ஒரு இயற்கையான மலமிலக்கியாக செயல்படுகிறது. குடல் இயக்கங்களை சீராக்குகிறது. மலச்சிக்கல் நீங்க ஒரு கையளவு கறிவேப்பிலையை தண்ணீரில் போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். பின்னர் அந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

வயிற்று போக்கு நீங்க

கறிவேப்பிலை பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து அதை ஒரு கிளாஸ் மோரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று போக்கு நீங்கும்.

ஒரு 15 கறிவேப்பிலை இலைகளை சுத்தம் செய்து அதனை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்தால் வயிற்று போக்கு நீங்கும்.

வாந்தி நிற்க

கறிவேப்பிலை இலையை அரைத்து எடுத்து அதை மோருடன் கலந்து குடித்தால் வாந்தி மற்றும் குமட்டல் நிற்கும்.

கல்லீரல்

கறிவேப்பிலையை தினசரி உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும் பல்வேறு நோய் தோற்றுலிருந்து கல்லீரலை பாதுகாத்து கொள்ள முடியும் .

முடி வளர்ச்சி

கறிவேப்பிலையில் உள்ள ஊட்ட சத்துக்கள் முடியின் வேர்களுக்குள் சென்று முடியின் வேர்களை வலுப்படுத்தி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

உபயோகப்படுத்தும் கூந்தல் எண்ணெயில் சிறிது கறிவேப்பிலை தூளை கலந்து இந்த எண்ணெயை இரவு தூங்கும் முன் தலையில் தேய்த்து இரண்டு நிமிடம் விரல்களால் மசாஜ் செய்து விட வேண்டும். காலையில் எழுந்து தலைக்கு குளித்து விடலாம்.

உடல் ஆரோக்கியத்திற்க்கு கறிவேப்பிலை உதவுகிறது. நாம் ஒதுக்க நினைக்கும் கறிவேப்பிலையால் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் நமக்கு கிடைக்காமல் போகலாம். அதனால் தினமும் உணவில் கறிவேப்பில்லையை சேர்த்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *