
கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 119வது தொகுதியாக கவுண்டம்பாளையம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | வி. சி. ஆறுகுட்டி | அதிமுக | 1,37,058 |
2016 | வி. சி. ஆறுகுட்டி | அதிமுக | 1,10,870 |
2021 | கோ. அருண்குமார் | அதிமுக | 1,35,669 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 2,25,909 | 2,27,241 | 119 | 4,53,269 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி)
வெள்ளமடை, கொண்டையம்பாளையம், அக்ரஹாரசாமக்குளம், நாய்க்கன்பாளையம், தடாகம் (ஆர்.எப்), ஆனைக்கட்டி (வடக்கு), ஆனைக்கட்டி (தெற்கு), வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை, கீரநத்தம், கள்ளிப்பாளையம் மற்றும் வெள்ளானைப்பட்டி கிராமங்கள்.
பெரியநாய்க்கன்பாளையம் (பேரூராட்சி), நரசிம்ம நாய்க்கன்பாளையம் (பேரூராட்சி), இடிகரை (பேரூராட்சி), விளாங்குறிச்சி (சென்சஸ் டவுன்), சரவணம்பட்டி (பேரூராட்சி), சின்னவேடம்பட்டி (பேரூராட்சி), வெள்ளைக்கிணறு (பேரூராட்சி), அசோகபுரம் (சென்சஸ் டவுன்), குருடம்பாளையம் (சென்சஸ் டவுன்), துடியலூர் (பேரூராட்சி), கவுண்டம்பாளையம் (பேரூராட்சி), சர்க்கார்சாமக்குளம் (பேரூராட்சி), காளப்பட்டி (பேரூராட்சி).
கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி