
கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 136வது தொகுதியாக கிருஷ்ணராயபுரம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1967 | பி. செளந்தரபாண்டியன் | திமுக | 28,444 |
1971 | பி. செளந்தரபாண்டியன் | திமுக | 36,177 |
1977 | பி. செளந்தரபாண்டியன் | அதிமுக | 22,561 |
1980 | பி. எம். தங்கவேல்ராஜ் | இந்திய தேசிய காங்கிரசு | 43,623 |
1984 | பி. எம். தங்கவேல்ராஜ் | இந்திய தேசிய காங்கிரசு | 65,928 |
1989 | ஏ. அறிவழகன் | அதிமுக | 43,574 |
1991 | ஏ. அறிவழகன் | அதிமுக | 80,676 |
1996 | எஸ். நாகரத்தினம் | திமுக | 57,638 |
2001 | ஆர். சசிகலா | அதிமுக | 64,046 |
2006 | பி. காமராசு | திமுக | 58,394 |
2011 | செ. காமராஜ் | அதிமுக | 83,145 |
2016 | ம. கீதா | அதிமுக | 83,977 |
2021 | க. சிவகாம சுந்தரி | திமுக | 94,310 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,03,746 | 1,08,976 | 51 | 2,12,773 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கரூர் வட்டம் (பகுதி)
கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியானை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) கிராமங்கள்.
புலியூர் (பேரூராட்சி) மற்ரும் உப்பிடமங்கலம் (பேரூராட்சி).
கிருஷ்ணராயபுரம் வட்டம் (பகுதி)
பாலராஜபுரம் ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூர், திருக்காம்புலியூர், மணவாசி, சித்தலாவை, கம்மநல்லூர், மகாதானபுரம் (வடக்கு), சேங்கல் மற்றும் முத்துரெங்கம்பட்டி கிராமங்கள்.
கிருஷ்ணாபுரம் (பேரூராட்சி), மற்றும் பழையஜெயங்கொண்ட சோழபுரம் (பேரூராட்சி).
குளித்தலை வட்டம் (பகுதி)
பாப்பயம்பாடி, வடவம்பாடி, மஞ்சநாய்க்கன்பட்டி, பண்ணப்பட்டி, தேவர்மலை, ஆதனூர், செம்பியநத்தம், டி.இடையப்பட்டி (மேற்கு), டி.இடையப்பட்டி (கிழக்கு), பாலவிடுதி, முள்ளிப்பாடி, மாவத்தூர், தரகம்பட்டி,கீழப்பகுதி மற்றும் வாழ்வார்மங்கலம் கிராமங்கள்.