குகர மேவுமெய்த் துறவினின் மறவாக்
கும்பிட் டுந்தித் – தடமூழ்கிக்
குமுத வாயின்முற் றமுதினை நுகராக்
கொண்டற் கொண்டைக் – குழலாரோ
டகரு தூளிகர்ப் புரதன இருகோட்
டன்புற் றின்பக் – கடலூடே
அமிழு வேனைமெத் தெனவொரு கரைசேர்த்
தம்பொற் றண்டைக் – கழல்தாராய்
ககன கோளகைக் கணவிரு மளவாக்
கங்கைத் துங்கப் – புனலாடும்
கமல வாதனற் களவிட முடியாக்
கம்பர்க் கொன்றைப் – புகல்வோனே
சிகர கோபுரத் தினுமதி ளினுமேற்
செம்பொற் கம்பத் – தளமீதும்
தெருவி லேயுநித் திலமெறி யலைவாய்ச்
செந்திற் கந்தப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : குடர்நிண மென்பு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 48