குலைத்து மயிர் (திருத்தணிகை) – திருப்புகழ் 264 

குலைத்து மயிர்க் கலைத்து வளைக்
கழுத்து மணித் தனப்பு ரளக்
குவித்த விழிக் கயற்சு ழலப் – பிறைபோலக்

குனித்த நுதற் புரட்டி நகைத்
துருக்கி மயற் கொளுத்தி யிணைக்
குழைச்செ வியிற் றழைப்ப பொறித் – தனபாரப்

பொலித்து மதத் தரித்த கரிக்
குவட்டு முலைப் பளப்ப ளெனப்
புனைத்த துகிற் பிடித்த இடைப் – பொதுமாதர்

புயத்தில் வளைப் பிலுக்கில் நடைக்
குலுக்கி லறப் பசப்பி மயற்
புகட்டி தவத் தழிப்ப வருக் – குறவாமோ

தலத்த நுவைக் குனித்தொ ருமுப்
புரத்தை விழக் கொளுத்தி மழுத்
தரித்து புலிக் கரித்து கிலைப் – பரமாகத்

தரித்து தவச் சுரர்க்கண் முதற்
பிழைக்க மிடற் றடக்கு விடச்
சடைக்க டவுட் சிறக்க பொருட் – பகர்வோனே

சிலுத்த சுரர்க் கெலித்து மிகக்
கொளுத்தி மறைத் துதிக்க அதிற்
செழிக்க அருட் கொடுத்த மணிக் – கதிர்வேலா

தினைப்பு னமிற் குறத்தி மகட்
டனத்தின் மயற் குளித்து மகிழ்த்
திருத்த ணியிற் றரித்த புகழ்ப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : பழனி திருப்புகழ்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *