குமர குருபர முருக சரவண (சுவாமிமலை) – திருப்புகழ் 214 

குமர குருபர முருக சரவண
குகசண் முககரி – பிறகான

குழக சிவசுத சிவய நமவென
குரவ னருள்குரு – மணியேயென்

றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென அநுதின – முனையோதும்

அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுர – லறியாயோ

திமிர எழுகட லுலக முறிபட
திசைகள் பொடிபட – வருசூரர்

சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு – மயில்வீரா

நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
நதிகொள் சடையினர் – குருநாதா

நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : பழனி திருப்புகழ்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *