குருவி என (திருத்தணிகை) – திருப்புகழ் 263

குருவி யெனப்பல கழுகு நரித்திரள்
அரிய வனத்திடை மிருக மெனப்புழு
குறவை யெனக்கரி மரமு மெனத்திரி – யுறவாகா

குமரி கலித்துறை முழுகி மனத்துயர்
கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி
குலைய னெனப்புலை கலிய னெனப்பலர் – நகையாமல்

மருவு புயத்திடை பணிக ளணப்பல
கரிப ரிசுற்றிட கலைகள் தரித்தொரு
மதன சரக்கென கனக பலக்குட – னதுதேடேன்

வரிய பதத்தினி னருவி யிருப்பிடம்
அமையு மெனக்கிட முனது பதச்சரண்
மருவு திருப்புக ழருள எனக்கினி – யருள்வாயே

விருது தனத்தன தனன தனத்தன
விதமி திமித்திமி திமித திமித்திமி
விகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு – வெகுதாளம்

வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை
நெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட
மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட – விடும்வேலா

அரிய திரிப்புர மெரிய விழித்தவன்
அயனை முடித்தலை யரியு மழுக்கையன்
அகில மனைத்தையு முயிரு மளித்தவ – னருள்சேயே

அமண ருடற்கெட வசியி லழுத்திவி
ணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ
டழகு திருத்தணி மலையில் நடித்தருள் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : குலைத்து மயிர் (திருத்தணிகை) – திருப்புகழ் 264 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *