கூர்வேல் பழித்த (திருத்தணிகை) – திருப்புகழ் 267

கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலை
கோடா லழைத்துமல – ரணைமீதே

கோபா விதழ்ப்பருக மார்போ டணைத்துகணை
கோல்போல் சுழற்றியிடை- யுடைநாணக்

கார்போல் குழற்சரிய வேவா யதட்டியிரு
காதோ லையிற்றுவிழ – விளையாடுங்

காமா மயர்க்கியர்க ளூடே களித்துநம
கானூ ருறைக்கலக – மொழியாதோ

வீரா ணம்வெற்றிமுர சோடே தவிற்றிமிலை
வேதா கமத்தொலிகள் – கடல்போல

வீறாய் முழக்கவரு சூரா ரிறக்கவிடும்
வேலா திருத்தணியி – லுறைவோனே

மாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில்
மாபோ தகத்தையருள் – குருநாதா

மாலோ னளித்தவளி யார்மால் களிப்பவெகு
மாலோ டணைத்துமகிழ் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கொந்துவார் குரவடி (திருத்தணிகை) – திருப்புகழ் 268 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *