
குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக்
குடையிட் டகுறைப் – பிறையாலே
குறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக்
குயிலுக் குமினித் – தளராதே
இவளைத் துவளக் கலவிக் குநயத்
திறுகத் தழுவிப் – புயமீதெ
இணையற் றழகிற் புனையக் கருணைக்
கினிமைத் தொடையைத் – தரவேணும்
கவளக் கரடக் கரியெட் டலறக்
கனகக் கிரியைப் – பொரும்வேலா
கருதிச் செயலைப் புயனுக் குருகிக்
கலவிக் கணயத் – தெழுமார்பா
பவளத் தரளத் திரளக் குவைவெற்
பவையொப் புவயற் – புறமீதே
பணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப்
பதியிற் குமரப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : கூந்தல் அவிழ்த்து (திருத்தணிகை) – திருப்புகழ் 266