குழல் அடவி (பழனி) – திருப்புகழ் 147

குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல்
குமுத வதரமு – றுவலாரம்

குழைம கரம்வளை மொழிகு யிலமுது
குயமு ளரிமுகை – கிரிசூது

விழிக யலயில்ப கழிவ ருணிகரு
விளைகு வளைவிட – மெனநாயேன்

மிகவ ரிவையரை அவநெ றிகள்சொலி
வெறிது ளம்விதன – முறலாமோ

கழல்ப ணியவினை கழல்ப ணியையணி
கழல்ப ணியவருள் – மயில்வீரா

கமலை திருமரு கமலை நிருதரு
கமலை தொளைசெய்த – கதிர்வேலா

பழனி மலைவரு பழநி மலைதரு
பழநி மலைமுரு – கவிசாகா

பரவு பரவைகொல் பரவை வணஅரி
பரவு மிமையவர் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : குழல்கள் சரிய (பழனி) – திருப்புகழ் 148 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *