மாதவரம் சட்டமன்றத் தொகுதி

மாதவரம் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 9வது தொகுதியாக மாதவரம் தொகுதி உள்ளது.

தொகுதி மறுசீரமைப்பில் மாதவரம் தொகுதி 2011 சட்டமன்றத் தேர்தலின் போது புதிதாக உருவாக்கப்பட்டது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

2011 வி. மூர்த்தி அதிமுக 1,15,468
2016 சு. சுதர்சனம் திமுக 1,22,082
2021 சு. சுதர்சனம் திமுக 1,51,485

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 2,17,961 2,20,296 103 4,38,360

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

பொன்னேரி வட்டம் (பகுதி)

பாடியநல்லூர் சென்சஸ் டவுன்).

நெற்குன்றம், செக்கஞ்சேரி, சூரப்பட்டு, சோத்துபெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், புது எருமை, வெட்டிப்பாளையம், பழைய எருமைவெட்டிப்பாளையம், சோழவரம், ஒரக்காடு, புதூர், கண்டிகை, மாரம்பேடு, கும்மனூர், ஆங்காடு, சிருணியம், செம்புலிவரம், நல்லூர், அலமாதி, ஆட்டந்தாங்கல், விஜயநல்லூர் மற்றும் பெருங்காவூர் கிராமங்கள்.

அம்பத்தூர் வட்டம் (பகுதி)

நாரவாரிக்குப்பம் பேரூராட்சி, புழல் பேரூராட்சி மற்றும் மாதவரம் நகராட்சி.

கீழ்கொண்டையூர், ஆலந்தூர், பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், மோரை, மேல்பாக்கம், கதவூர், வெள்ளச்சேரி, பாலவேடு, வெள்ளானூர், பொத்தூர், பம்மதுகுளம், தீர்க்ககிரியம்பட்டு, பாலவயல், விளாங்காடு பாக்கம், சிறுகாவூர், அரியலூர், கடப்பாக்கம், சடையன்குப்பம், எலந்தஞ்சேரி, மாத்தூர், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், செட்டி மேடு, வடம்பெரும்பாக்கம், லயான், பாயசம்பாக்கம், கிராண்ட் லயான், அழிஞ்சிவாக்கம், அத்திவாக்கம்ம், வடகரை, சூரப்பட்டு, கதிர்வேடு மற்றும் புத்தகரம் கிராமங்கள்.

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *