
மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 192வது தொகுதியாக மதுரை தெற்கு தொகுதி உள்ளது.
இத் தொகுதி முதலில் 1952ஆம் ஆண்டு மதுரை கிழக்குத் தொகுதி எனும் பெயரில் உருவாக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பின் போது மதுரைதெற்கு சட்டமன்றத் தொகுதி என மாற்றப்பட்டது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
2011 | ஆர். அண்ணா துரை | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 83,441 |
2016 | எஸ். எஸ். சரவணன் | அதிமுக | 62,683 |
2021 | மு. பூமிநாதன் | மதிமுக | 62,812 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,10,508 | 1,14,079 | 24 | 2,24,611 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
மதுரை மாநகராட்சியின் 9, 10, 16, 19, 39, 43 முதல் 59 வரையிலான வார்டுகள் மதுரை தெற்கு தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இவற்றில் முனிச்சாலை, லெட்சுமிபுரம், கான்பாளையம், கிருஷ்ணாபுரம், ஓலைப்பட்டினம், சீனிவாசப்பெருமாள் கோயில் பகுதிகள், கொண்டித்தொழு தெருக்கள், பங்கஜம் காலனி, தெப்பக்குளம், கீழ வாசல், காமராஜர்புரம், சிந்தாமணி, வாழைத்தோப்பு, பாலரெங்காபுரம், பழைய குயவர் பாளையம், செல்லூர், மதிச்சியம், வில்லாபுரம், தெப்பக்குளம், ஆழ்வார்புரம், செனாய்நகர் ஆகியவை முக்கிய பகுதிகள் ஆகும்.