
மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 144வது தொகுதியாக மண்ணச்சநல்லூர் தொகுதி உள்ளது. இத் தொகுதி 2011-ஆம் ஆண்டுத் தேர்தலின் போது புதிதாக உருவாக்கப்பட்டது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | டி. பி. பூனாட்சி | அதிமுக | 83,105 |
2016 | எம். பரமேஸ்வரி | அதிமுக | 83,083 |
2021 | எஸ். கதிரவன் | திமுக | 1,14,071 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,18,270 | 1,27,000 | 33 | 2,45,303 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- மண்ணச்சநல்லூர் வட்டம்
- முசிறி வட்டம் (பகுதி)
வேங்கை மண்டலம், மூவானூர், பெரமங்கலம், காட்டுக்குளம், கோமங்கலம், நெய்வேலி, திண்ணக்கோணம், அய்யம்பாளையம், ஏவூர், கொடுந்துறை, சித்தாம்பூர், ஆமூர், குணசீலம், திருத்தலையூர், புதுப்பட்டி, கரட்டாம்பட்டி, திண்ணனூர், சுக்காம்பட்டி, புலிவலம், திருத்தியமலை, மங்களம், துலையாநத்தம், ஜெயங்கொண்டம் (டி.புத்தூர்), பேரூர், வாளவந்தி (கிழக்கு), மண்பறை மற்றும் வாளவந்தி (மேற்கு) கிராமங்கள்.