மங்கை சிறுவர் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 84 

மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்
வந்து கதற – வுடல்தீயின்

மண்டி யெரிய விண்டு புனலில்
வஞ்ச மொழிய – விழஆவி

வெங்கண் மறலி தன்கை மருவ
வெம்பி யிடறு – மொருபாச

விஞ்சை விளைவு மன்று னடிமை
வென்றி யடிகள் – தொழவாராய்

சிங்க முழுவை தங்கு மடவி
சென்று மறமி – னுடன்வாழ்வாய்

சிந்தை மகிழ அன்பர் புகழு
செந்தி லுறையு – முருகோனே

எங்கு மிலகு திங்கள் கமல
மென்று புகலு – முகமாதர்

இன்பம் விளைய அன்பி னணையு
மென்று மிளைய – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : மஞ்செனுங் குழல் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 85 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *