திருமண வரம் அருளும் மங்கள கௌரி விரதம்..!

பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் என்பதால் அம்மனின் சக்தி இரட்டிப்பாகும்.

ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமைகள் மட்டுமல்ல செவ்வாய் கிழமைகளும் முக்கியமானவை.

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து சிவப்பு நிற ஆடையணிந்து வீட்டில் பூஜையறையில் தீபம் ஏற்றி, வாசனை மலர்கள், செந்நிற மலர் அல்லது செண்பக மலர்கள் சாற்றி தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு சமர்ப்பித்து, அம்பாளை வழிபட்டு, மங்கல கவுரி விரதம் கடைப்பிடிப்பது விசேஷ பலன்களை தரும்.

சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் குங்குமம், வெற்றிலை பாக்கு, பழம் கொடுக்க வேண்டும். இதனால் ஜாதகத்திலுள்ள செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணம் நடைபெறும். குழந்தை பேறு உண்டாகும். கடன்கள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

காலை 8 – 9 மணிக்குள் சுக்கிர ஓரையிலும், மாலை 3 – 4.30 மணிக்கு ராகு காலத்திலும் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும். இயன்றவர்கள் அன்னதானம் மற்றும் சிகப்பு துவரை தானம் செய்யலாம்.

ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் ராகு/கேது இணைவதால் ஏற்பட்ட தொல்லைகள் தீரும்.

இதையும் படிக்கலாம் : பயத்தைப் போக்க எந்த கடவுளை வணங்க வேண்டும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *