
மருவே செறித்த குழலார் மயக்கி
மதனா கமத்தின் – விரகாலே
மயலே யெழுப்பி யிதழே யருத்த
மலைபோல் முலைக்கு – ளுறவாகிப்
பெருகாத லுற்ற தமியேனை நித்தல்
பிரியாது பட்ச – மறவாதே
பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற
பெருவாழ்வு பற்ற – அருள்வாயே
குருவா யரற்கு முபதேசம் வைத்த
குகனே குறத்தி – மணவாளா
குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து
குடகா விரிக்கு – வடபாலார்
திருவே ரகத்தி லுறைவா யுமைக்கோர்
சிறுவா கரிக்கு – மிளையோனே
திருமால் தனக்கு மருகா வரக்கர்
சிரமே துணித்த – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : பழனி திருப்புகழ்..!