மாசி மாதம் மகாசிவராத்தியை முன்னிட்டு அமாவாசை நாளில் நடைபெறும் மயானக்கொள்ளை விழா தமிழகத்தில் பிரசித்தி பெற்றது. காளியம்மன், அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோயில்களில் இருந்து ஊர்வலமாக மயானங்களுக்கு வரும் பக்தர்கள், அங்கு தங்கள் முன்னோர்கள் சமாதியில் படையல் போட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவர். நள்ளிரவில் நடைபெறும் இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.
தமிழகம் முழுவதும் மயங்ககை நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும், மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெறும் மயானக்கொள்ளை பிரசித்தி பெற்றது. இவ்விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அங்காளம்மன் குடிகொண்டுள்ள அனைத்து ஆலயங்களிலும் மயானக்கொள்ளை நடைபெறுகிறது.
மயானக் கொள்ளை வரலாறு
ஆரம்பத்தில் படைப்புக் கடவுள் நான்முகனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. பார்வதி தேவி பிரம்மாவின் ஐந்து தலைகளைக் கண்டு சிவன் என்று நினைத்து வணங்கினாள். இதனைக் கண்டு நகைத்ததால் சினம் கொண்ட பார்வதி சிவனிடம் முறையிட, பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்துவிட்டார். கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி சிவன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், உலகுக்கே படியளக்கும் சிவனுக்கு உணவு கிட்டவில்லை.
இந்நிலையில், பிரம்மாவைக் கொன்றதற்கு பார்வதியே காரணம் என்று நம்பிய சரஸ்வதி தேவி, பார்வதியிடம், “கொடிய உருவத்துடன் நீ இடம் இல்லாமல் அலைந்து புற்றையே வீடாகக் கொண்டு வாழ்வாய்!’ எனச் சாபமிட்டாள். அதன்படி பார்வதி உலகில் பல இடங்களுக்குச் சென்று இறுதியாக மலையரசுனுக்கு உரிமையான ஒரு நந்தவனத்தில் தவம் இருக்கத் தொடங்கினாள். அங்கு, கோவிலுக்கு காவலாக இருந்த மீனவர் காவலர், அவளை தடுத்து, புற்றால் தன்னை மூடிக் கொண்டு அங்காள பரமேஸ்வரியாகக் கோவில் கொண்டாள். மலையரசன் புற்றைக் கலைக்க முயன்றார், ஆனால் அவர் தனது வலிமையை இழந்தார். அதனால் வந்திருப்பது அம்மையே என்பது அனைவருக்கும் தெரிந்தது. மலையனூர் என்று அழைக்கப்படும் இந்த இடம் இன்றும் மீனவ மக்களால் சேவை செய்யப்படுகிறது.
சிவபெருமான் இக்கோயிலுக்கு வந்த போது அங்காள பரமேஸ்வரி சிவபெருமான் கையில் இருந்த கபாலத்தில் சுவையான உணவைப் போட்டாள். கபாலம் அனைத்தையும் விழுங்கிவிட, மகாலட்சுமியின் அறிவுரைப்படி அம்மன் மூன்றாவது கவளத்தைக் கைதவறியது போலக் கீழே போட்டாள். கபாலம் அந்த உணவின் ருசியில் மயங்கி சிவனின் கையிலிருந்து கீழே இறங்கி போனது; பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கைகளை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து தரையில் அழுத்தினாள். உடனே சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி சுயநிலையை அடைந்தார். இதை நினைவுபடுத்தும் வகையிலேயே மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அனைத்து ஊர் மயானங்களிலும் மயானக்கொள்ளை உற்சவம் நடத்தப்படுகிறது.
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி
பிரம்மனின் தலையை தன் காலால் மதித்து சிவனை பிரம்ம ஹத்தி தோஷத்திலிருந்து விடுவிக்கின்றாள் இதனால் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி உக்கரம் அடைகிறாள். எனவே அம்மனை சாந்தி படுத்தவே அமாவாசை நள்ளிரவில் அம்மனை ஊஞ்சலில் அமர வைத்து தாலட்டு பாடல்கள் பாடி அம்மனை சாந்தி படுத்துகின்றனர். அன்றைக்கு அம்மனைக் காண வரும் பக்கதர்களுக்கு அம்மன் அருள் பூர்ணமாக கிடைப்பதாக நம்பப்படுகிறது.
மயானக் கொள்ளை திருவிழா
அங்காளம்மன், பெரியண்ணன், முனியப்பன், கருப்பண்ணன் போன்ற பக்தர்களுக்கு காளி வேடமிட்டு, முகத்தில் வண்ணம் பூசி, மயில் தோகை கட்டி, நடனம் ஆடி, ஆடி மயானம் சென்று தரிசனம் செய்தனர்.
கடும் கோபம் அடைந்த அம்மன், உலகில் உள்ள உயிர்களை பலி கொண்டு, ஆக்ரோஷத்தில் இருந்தார். அப்போது, அங்காளபரமேஸ்வரியின் கோபத்தை தணிக்க சிவபெருமான் ருத்ர நடனம் ஆடி அம்மனை சங்கலியால் கட்டி போட்டார். அம்மனின் அடங்காத கோபத்தை கட்டுப்படுத்திய சிவன், ஆண்டுதோறும், மஹாசிவராத்திரி விழாவுக்கு அடுத்து வரும் அமாவாசை தினத்தில், அம்மனின் கட்டு அவிழ்க்கப்பட்டு, உயிர் பலி வாங்க அனுமதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, மாசி அமாவாசை தினத்தில், “மயான கொள்ளை’ விழாவை பொதுமக்கள் கோலாகலமாக நடத்துகின்றனர்.