மேட்டூர் சட்டமன்றத் தொகுதி 

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 85வது தொகுதியாக மேட்டூர் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1957 கே. எஸ். அர்த்தனாரீசுவர கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு 15,491
1962 கே. எஸ். அர்த்தநாதீஸ்வரா கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு 18,065
1967 மா. சுரேந்திரன் பிரஜா சோசலிச கட்சி 30,635
1971 மா. சுரேந்திரன் பிரஜா சோசலிச கட்சி 32,656
1977 கே. பி. நாச்சிமுத்து கவுண்டர் அதிமுக 30,762
1980 கே. பி. நாச்சிமுத்து கவுண்டர் அதிமுக 48,845
1984 கே. பி. நாச்சிமுத்து கவுண்டர் அதிமுக 46,083
1989 எம். சீரங்கன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 23,308
1991 எஸ். சுந்தராம்பாள் அதிமுக 53,368
1996 பி. கோபால் திமுக 50,799
2001 எஸ். சுந்தராம்பாள் அதிமுக 49,504
2006 கோ. க. மணி பாமக 66,250
2011 எஸ். ஆர். பார்த்திபன் தேமுதிக 75,672
2016 செ. செம்மலை அதிமுக 72,751
2021 சு. சதாசிவம் பாமக 97,055

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,40,016 1,36,250 12 2,76,278

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

மேட்டூர் வட்டம் (பகுதி)

காவேரிபுரம், சிங்கிரிப்பட்டி தின்னப்பட்டி, கோனூர், கூனாண்டியூர், பள்ளிப்பட்டி, மல்லிக்குண்டம், தெத்தகிரிப்பட்டி, வெள்ளார், புக்கம்பட்டி, அமரம், மே.கள்ளிப்பட்டி, பொட்டனேரி, விருதாசம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, லக்கம்பட்டி, கண்ணாமூச்சி, மூலக்காடு, சாம்பள்ளி, பாலமலை, நவப்பட்டி, கொப்பம், கொப்பம்பட்டி, பாணாபுரம், பெரியசாத்தப்பட்டி, சின்னசாத்தப்பாடி, அரங்கனூர், ஓலைப்பட்டி, மானத்தாள் நல்லாகவுண்டம்பட்டி மற்றும் குலநாயக்கன்பட்டி கிராமங்கள்.

மேச்சேரி (பேரூராட்சி),கொளத்தூர் (பேரூராட்சி), வீரக்கல்புதூர் (பேரூராட்சி), பி. என். பட்டி (பேரூராட்சி) மற்றும் மேட்டூர் (நகராட்சி).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *