மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 100வது தொகுதியாக மொடக்குறிச்சி தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1967 கே. ஆர். நல்லசிவம் சங்கத சோசலிச கட்சி 45,303
1971 மு. சின்னசாமி திமுக 45,108
1977 சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிமுக 38,072
1980 ச. பாலகிருஷ்ணன் அதிமுக 56,049
1984 ச. பாலகிருஷ்ணன் அதிமுக 65,641
1989 அ. கணேசமூர்த்தி திமுக 58,058
1991 கவிநிலவு தர்மராஜ் அதிமுக 78,653
1996 சுப்புலட்சுமிஜெகதீசன் திமுக 64,436
2001 பி. சி. இராமசாமி அதிமுக 74,296
2006 ஆர். எம். பழனிசாமி இந்திய தேசிய காங்கிரசு 64,625
2011 ஆர். என். கிட்டுசாமி அதிமுக 87,705
2016 வி. பி. சிவசுப்பிரமணி அதிமுக 77,067
2021 சி. சரஸ்வதி பாஜக 78,125

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,09,721 1,19,206 15 2,28,942

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

ஈரோடு வட்டம் (பகுதி)

புஞ்சை லக்காபுரம், புதூர், துய்யம்பூந்துறை, கனகபுரம், வேலம்பாளையம், பூந்துறை, சேமூர், அவல்பூந்துறை, மொடவாண்டி சத்தியமங்கலம், நஞ்சை ஊத்துக்குளி, கண்ணுடையாம்பாளையம் புதூர், முத்தாயிபாளையம், ஈஞ்சம்பள்ளி, தானத்தம்பாளையம், எழுமாத்தூர், வேலம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, காகம், குலவிளக்கு, பழமங்கலம், நஞ்சை கொளாநல்லி, கொளத்துபாளையம், கொந்தளம், எல்லைக்காடு, விளக்கேத்தி, கொங்குடையம்பாளையம், முருங்கியம்பாளையம், அஞ்சூர், வள்ளிபுரம், இச்சிபாளையம், வடிவுள்ளமங்கலம், அய்யம்பாளையம், எழுநூத்திமங்கலம், தேவகி அம்மாபுரம், ஆவுடையாபாறை மற்றும் நாகமநாய்க்கன்பாளையம் கிராமங்கள்.

அவல்பூந்துறை (பேரூராட்சி), மொடக்குறிச்சி (பேரூராட்சி), பாசூர் (பேரூராட்சி), அரச்சலூர் (பேரூராட்சி), வடுகப்பட்டி (பேரூராட்சி), கிளாம்பட்டி (பேரூராட்சி), வெள்ளோட்டம்பரப்பு (பேரூராட்சி), சிவகிரி (பேரூராட்சி), கந்தசாமிபாளையம் (பேரூராட்சி), ஊஞ்சலூர் (பேரூராட்சி), வெங்கம்பூர் (பேரூராட்சி), கொடுமுடி (பேரூராட்சி) மற்றும் சென்னசமுத்திரம் (பேரூராட்சி).

பெருந்துறை சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *