முதிரவுழையை (பழனி) – திருப்புகழ் 186

முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து
முதிய கயல்கள் கயத்தி – னிடையோடி

முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி
முறைமை கெடவு மயக்கி – வருமாதர்

மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு
வலிய அடிமை புகுத்தி – விடுமாய

மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
மகிழ வுனது பதத்தை – யருள்வாயே

சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து
சகடு மருத முதைத்த – தகவோடே

தழையு மரமு நிலத்தில் மடிய அமரை விளைத்த
தநுவை யுடைய சமர்த்தன் – மருகோனே

அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து
அமரர் சிறையை விடுத்து – வருவோனே

அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு
ளழகு மயிலை நடத்து – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : முத்துக்கு (பழனி) – திருப்புகழ் 187

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *