முலை முகம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 92

முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு
முறுவ லுஞ்சி வந்த – கனிவாயும்

முருக விழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்த
முகிலு மின்ப சிங்கி – விழிவேலும்

சிலைமு கங்க லந்த திலத முங்கு ளிர்ந்த
திருமு கந்த தும்பு – குறுவேர்வும்

தெரிய வந்து நின்ற மகளிர் பின்சு ழன்று
செயல ழிந்து ழன்று – திரிவேனோ

மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு
வழிதி றந்த செங்கை – வடிவேலா

வளர்பு னம்ப யின்ற குறம டந்தை கொங்கை
மணிவ டம்பு தைந்த – புயவேளே

அலைமு கந்த வழ்ந்து சினைமு திர்ந்த சங்க
மலறி வந்து கஞ்ச – மலர்மீதே

அளிக லந்தி ரங்க இசையு டன்து யின்ற
அரிய செந்தில் வந்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : மூப்புற்றுச் செவி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 93 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *