அருணகிரிநாதர் சிறுவாபுரி முருகனைப் போற்றிப் பாடி இருக்கும் நான்கு திருப்புகழையும், அதில் மறை பொருளாகச் சொல்லி இருக்கும் பிரார்த்தனைகளையும் அவற்றால் நாம் பயன்பெறும் வழிகளையும் இங்கு காணலாம்.
சீதள வாரிஜ பாதா! நமோநம
நாரத கீத விநோதா நமோநம
சேவல மாமயில் ப்ரீதா! நமோநம – மறைதேடுஞ்
சேகரமான ப்ரதாபா! நமோநம
ஆகமசார சொரூப நமோநம
தேவர்கள் சேனைமகீபா! நமோநம- கதிதோயப்
பாதக நீவுகுடாரா! நமோநம
மாவசு ரேசர்கடோரா நமோநம
பாரினி லேஜய வீரா! நமோநம- மலைமாது
பார்வதி யாள்தரு பாலா! நமோநம
நாவல ஞான மனோலா நமோநம
பால குமார சுவாமி! நமோநம- அருள்தாராய்
போதக மாமுகன் நேரான சோதர
நீறணி வேணியர் நேயா! நமோநம
பூமக ளார்மரு கேசா மகோததி- இகல்சூரா
போதக மாமறை ஞான! தயாகரா!
தேனவிழ் நிபநறா வாரு மார்பக
பூரணி மாமதி போல் ஆறு மாமுக!- முருகேசா
மாதவர் தேவர்களோடேமுராரியும்
மாமலர் மீதுறை வேதாயு மேபுகழ்
மாநிலம் ஏழினும் மேலான நாயக!- வடிவேலா
வானவர் ஊரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வே! சுராதிபர்- பெருமாளே
- இந்த அர்ச்சனை திருப்புகழை பாடும் போது பொருளை உணர்ந்து “நமோ நம” என்று கூறி, சிறுவை பால சுப்பிரமணியரின் திருவடிகளில் மலர்களை அர்ச்சிக்க வேண்டும்.
- அர்ச்சனை திருப்புகழ் முதல் பன்னிரண்டு படிகள் முருகப்பெருமானின் வீரம், அழகு மற்றும் உறவுமுறைகளை விவரிக்கிறது.
- அடுத்த பன்னிரண்டு அடிகளில் சிறுவாபுரியின் செல்வம், சிறப்பு அழகு, பெருமை ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.
- இந்த வரிகளை சொல்லும் போது, முருகனை உணர்ந்து வேண்டி, அவனருளால் அனைத்து செல்வங்களையும் பெற பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாம் : சிறுவாபுரி சென்றால் சொந்தவீடு நிச்சயம்..!