முருகுசெறி குழலவிழ (பழனி) – திருப்புகழ் 190

முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவு
முறுவல்தர விரகமெழ – அநுராகம்

முதிரவச மறவிதரி யெழுகைவளை கலகலென
முகநிலவு குறுவெயர்வு – துளிவீச

அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக
அகமகிழ இருகயல்கள் – குழையேற

அமளிபடு மமளிமல ரணையின்மிசை துயிலுகினும்
அலர்கமல மலரடியை – மறவேனே

நிருதனொடு வருபரியு மடுகரியும் ரதநிரையும்
நெறுநெறன முறியவிடும் – வடிவேலா

நிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமர
நெடியநெடு ககனமுக – டுறைவோனே

வருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதற
மதுவினிரை பெருகுவளி – மலைமீதே

வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமு
மருவிமகிழ் பழநிவரு – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : முருகு செறிகுழல் முகில் (பழனி) – திருப்புகழ் 191

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *