முருங்கை கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முருங்கை கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முருங்கை கீரை நம் அனைவருக்கும் இயற்கை தந்த வரம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அதில் சக்திகள் நிறைந்த உள்ளன.

முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் முருங்கை கீரை முருங்கைக்காய் ஆகியவை உணவிர்க்கும் முருங்கை பூக்கள் மற்றும் முருங்கை மரத்தின் பட்டைகள் கூட மருத்துவத்திற்காக பயன்படுத்தபடுகிறது.

முருங்கை கீரையில் உள்ள சத்துக்கள்

  • இரும்பு சத்துக்கள்
  • விட்டமின் A
  • விட்டமின் C
  • பொட்டாசியம்
  • மெக்னீசியம்
  • கால்சியம்

இது ரத்ததில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும். ரத்தம் குறைவாக உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கைக்கீரையை நெய்யில் வதக்கி அதனுடன் பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் அதிகரிக்கும்.

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு முருங்கைக்கீரை மிகச்சிறந்த மருந்து. முருங்கை கீரை ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முருங்கை கீரை சூப் செய்து உணவுக்கு பின் குடிக்கலாம்.

இக்கீரையை ஒரு கையளவு எடுத்து நன்றாக சுத்தம் செய்து அதனை ஒரு இரண்டு கப் தண்ணீரில் கொதிக்க அதனுடன் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் முருங்கை கீரை சூப் ரெடி.

முருங்கை கீரையில் உள்ள குளோரோ ஜெனிக் எனும் ஆன்டி ஆக்சிடன்ட் உடலில் தங்கயிருக்கும் கொழுப்புகளை எரிக்கும் தன்மை கொண்டது. மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

உடல் எடை குறைய

ஒரு கை அளவு முருங்கை கீரையை எடுத்து கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஜூஸ் செய்து கொள்ளவும்.

அதனுடன் அரை எலுமிச்சை பழம் மற்றும் சிறிது தேன் கலந்து ஒரு வாரம் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மலட்டுதன்மை

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மலட்டுதன்மை நீங்க முருங்கை பூ சிறந்தது. ஒரு இருபது முருங்கை பூவை எடுத்து கொள்ளுங்கள்.

அதை சுத்தமாக கழுவி சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் ஒரு கிளாஸ் பசும் பால் சேர்த்து கொள்ளுங்கள் சுவைக்காக சிறிது சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.

இதை ஒரு வாரம் முதல் ஒரு மாதம் செய்து பார்த்தால் நல்ல பலன் தரும்.

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு தன்மை பிரச்சனை நீங்க முருங்கை விதையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதுனுடன் சிறிது மிளகு மற்றும் இஞ்சி சேர்த்து சூப் மாதிரி செய்து குடித்து வந்தால் நல்ல பலனை அடையலாம்.

இக்கீரை ஒரு சக்தி வாய்ந்த இயற்கை மருந்து, இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல், கண் மற்றும் காது வலி, மூட்டு வலி பிரச்சினைகள் தீரும். சருமம் பொலிவடையும்.

குறிப்புகள்

முருங்கை கீரை சிலருக்கு அஜீரண கோளாறு ஏற்படுத்தலாம். உடலுக்கு ஒத்துக் கொள்ளாதவர்கள் சாப்பிட வேண்டாம். முருங்கைக்கீரையை அதிக அளவு எடுத்து கொள்ள கூடாது.

இரவு நேரங்களில் கீரையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்ததிற்கு மருந்து எடுத்து கொள்பவராக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்று பின் முருங்கை கீரை சூப் குடிக்கலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *