முருங்கை மரத்தில் கிளைகள் மெல்லியதாக இருக்கும் இதில் குழந்தைகள் ஏறி விளையாடினாள் கீழே விழுந்து விடுவார்கள் என்பதை தவிர்க்கவும் மேலும் முருங்கை மரத்தின் வேர் வீட்டின் அஸ்திவாரத்தை பதம்பார்க்கும் தன்மை கொண்டது.
அதேபோல லேசான காற்று அடித்தாலும் முருங்கை தாவு உடைந்து விழுந்து விடும். சொந்த பந்தங்கள் யாராவது வீட்டுக்கு வந்தவுடன் வீட்டின் முன்புறத்தில் இந்த மரத்தை பார்த்தால் சிலர் அபசகுணமாக நினைப்பார்கள்.
குளிர் காலங்களில் இந்த முருங்கை மரத்தில் நிறைய கம்பளிப் பூச்சிகள் உருவாகும். வீட்டில் சின்ன குழந்தைகள் இருந்தாலோ அல்லது துணி வீட்டின் வெளியே காயவைத்திருந்தாலோ அந்த கம்பளி பூச்சிகள் சட்டைக்குள் ஏறிவிடும் என்பதற்காக தான் வீட்டின் முன் முருங்கை மரத்தை வைக்கக்கூடாது என்று நம்ம முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
மற்றபடி முருங்கை மரத்தில் பேய் இருக்கும், அது நம்மள வந்து புடிச்சுக்கும் என்று சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை தான்.
முருங்கையை வளர்த்தவன் வெறுங்கையோடு போவான் என்பது பழமொழி. இந்த பழமொழிக்கு முருங்கையை வளர்ப்பவர்கள் வயதான காலத்தில் கோலூன்றி நடக்காமல் கம்பீரமாக நடக்கலாம் என்பதே அர்த்தம்.
முருங்கை மரத்தை வளர்த்தால் அதில் இருக்கும் இலை முதல் பட்டை வரை அனைத்துமே மூலிகை தான். ஒவ்வொன்றும் மனிதனுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க உதவக் கூடியது. அதுவும் ஆண்மையை தூண்டிவிடுவதில் முருங்கைக்கு இணை இந்த உலகத்தில் எதுவும் கிடையாது.
வீட்டில் முருங்கை மரம் வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் வீட்டின் பின்புறத்தில் வைத்துக்கொள்ளலாம்.