நாலும் ஐந்து வாசல் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 70 

நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி
நாரி யென்பி லாகு மாக – மதனூடே

நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி
நாட றிந்தி டாம லேக – வளராமுன்

நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை
நூறு செஞ்சொல் கூறி மாறி – விளைதீமை

நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான
நூல டங்க வோத வாழ்வு – தருவாயே

காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு
காலம் வந்து வோல மோல – மெனுமாதி

காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர்
காள கண்ட ரோடு வேத – மொழிவோனே

ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
ஆழி யங்கை ஆயன் மாயன் – மருகோனே

ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி
யான செந்தில் வாழ்வ தான – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : நிதிக்குப் பிங்கலன் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 71 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *