நாசர்தங் கடை (சுவாமிமலை) – திருப்புகழ் 222

நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து – தடுமாறி
ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி – மெலியாதே

மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து – சுகமேவி
மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று – பணிவேனோ

வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற – குருநாதா
வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு – மணவாளா

கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து – புடைசூழுங்
கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : நாவேறு பா மணத்த (சுவாமிமலை) – திருப்புகழ் 223

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *