
நத்தம் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 131வது தொகுதியாக நத்தம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | மெ. ஆண்டி அம்பலம் | இந்திய தேசிய காங்கிரசு | 29,055 |
1980 | மெ. ஆண்டி அம்பலம் | இந்திய தேசிய காங்கிரசு | 36,859 |
1984 | மெ. ஆண்டி அம்பலம் | இந்திய தேசிய காங்கிரசு | 57,214 |
1989 | மெ. ஆண்டி அம்பலம் | இந்திய தேசிய காங்கிரசு | 33,019 |
1991 | மெ. ஆண்டி அம்பலம் | இந்திய தேசிய காங்கிரசு | 71,902 |
1996 | மெ. ஆண்டி அம்பலம் | தமாகா | 62,527 |
2001 | நத்தம் ஆர். விசுவநாதன் | அதிமுக | 55,604 |
2006 | நத்தம் ஆர். விசுவநாதன் | அதிமுக | 62,292 |
2011 | நத்தம் ஆர். விசுவநாதன் | அதிமுக | 94,947 |
2016 | எம். ஏ. ஆண்டி அம்பலம் | திமுக | 93,822 |
2021 | நத்தம் ஆர். விசுவநாதன் | அதிமுக | 1,07,762 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,37,960 | 1,44,493 | 55 | 2,82,508 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- நத்தம் வட்டம்
- திண்டுக்கல் வட்டம் (பகுதி)
தொட்டனூத்து, ராஜாக்காப்பட்டி, மதூர், சிலவத்தூர், வங்கன்மானூத்து, மார்க்கம்பட்டி, வஜ்ரசேர்வைகாரன்கோட்டை, வத்திலதோப்பம்பட்டி, தேத்தம்பட்டி, ராகலாபுரம், கூவனூத்து, அடியனூத்து, ஏ.வெள்ளோடு, வரலிபட்டி, வடகாட்டுபட்டி, சாணார்பட்டி, வீரசின்னம்பட்டி, ஆவீளீப்பட்டி, மரனூத்து, ஜோத்தம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, கோணப்பட்டி, எமக்கலாபுரம், தவசிமடை, சிறுமலை, கோம்பைப்பட்டி, கணவாய்ப்பட்டி, செங்குறிஞ்சி மற்றும் காம்பிலியம்பட்டி கிராமங்கள்.
பஞ்சம்பட்டி (பேரூராட்சி).