நிலையாத சமுத்திர (திருத்தணிகை) – திருப்புகழ் 277

நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி
நிசமான தெனப்பல பேசி – யதனூடே

நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி
நினைவால்நி னடித்தொழில் பேணி – துதியாமல்

தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி
சலமான பயித்திய மாகி – தடுமாறித்

தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி
தலைமீதில் பிழைத்திட வேநி – னருள்தாராய்

கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத
கவினாரு புயத்திலு லாவி – விளையாடிக்

களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை
கடனாகு மிதுக்கன மாகு – முருகோனே

பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்துடன் வாழ – அருள்வேளே

பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு
பவரோக வயித்திய நாத – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : நினைத்தது எத்தனை (திருத்தணிகை) – திருப்புகழ் 278

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *