நிலவினிலே (சுவாமிமலை) – திருப்புகழ் 224

நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து
நிறைகுழல் மீத ணிந்து – குழைதாவும்

நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள்
நினைவற வேமொ ழிந்து – மதனூலின்

கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்து
கனியித ழேய ருந்தி – யநுராகக்

கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்கு
கபடனை யாள வுன்ற – னருள்கூராய்

உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்கு
முயர்கயி லாய மும்பொன் – வரைதானும்

உயிரொடு பூத மைந்து மொருமுத லாகி நின்ற
உமையரு ளால்வ ளர்ந்த – குமரேசா

குலைபடு சூர னங்க மழிபட வேலெ றிந்த
குமரக டோர வெங்கண் – மயில்வாழ்வே

கொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்த
குருமலை மீத மர்ந்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் :  நிறைமதி முகமெனும் (சுவாமிமலை) – திருப்புகழ் 225

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *